: F8Jbzul_3UjGQyS2DA3w32un2Rs SAMSCRUTINY: "தினமலர்' இதழை தடை செய்யுங்கள்! -- பா.ம.க

SAMSCRUTINY2

Saturday, February 4, 2012

"தினமலர்' இதழை தடை செய்யுங்கள்! -- பா.ம.க

வன்னியர் சங்கம் குறித்து செய்தி வெளியிட்ட, "தினமலர்' நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்குமாறு, வன்னியர் சங்க மாநிலத் தலைவர், ஜெ.குரு, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி, வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.,வுமான, ஜெ.குரு இருவரும் நேற்று, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியைச் சந்தித்து, "தினமலர்' மீது புகார் கொடுத்தனர். குரு கையெழுத்திட்டு கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:நான் மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளேன். வன்னியர் சங்கம், ராமதாசை நிறுவனராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது; வன்னியர் சமூகத்தின் கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் வன்னியர்கள் தனிப்பெரும் சமூகத்தினராக உள்ளனர்.

"தினமலர்' நாளிதழிலில், கடந்த, 29ம் தேதி, சென்னை பதிப்பின் இரண்டாம் பக்கத்தில், "வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா, கவுண்டர்களாக மாறி வரும் வன்னியர்கள்' என்ற தலைப்பில் உண்மைக்கு புறம்பான, அவதூறான, இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டும் வகையில், மற்ற சமூகத்தினரிடம் வன்னியர் சமூக மக்களை தாழ்த்தி, தனிமைப்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் வன்னிய சமூக மக்களை அவமதிக்கும் விதத்திலும், ஒரு கட்டுரையை திட்டமிட்டு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளனர்.

வன்னிய மக்களை அவமதித்து வன்னியர், கவுண்டர் சமூகத்தினரிடையே தவறான எண்ணத்தை பரப்பி கருத்து வேறுபாட்டையும், ஜாதி மோதலையும், "தினமலர்' நாளிதழ் திட்டமிட்டு உருவாக்கியுள்ளது.அதோடு, அவர்களின் இணையதளத்திலும் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளனர். இச்செய்தியால், இரு சமூகத்தினரிடையே பிரிவினையும், வன்முறையும் ஏற்படும் சூழல் உள்ளது. உண்மைக்கு புறம்பாக, அவதூறாக செய்தி வெளியிட்ட, "தினமலர்' நாளிதழை தடை செய்யும்படியும், வெளியிட்டஎதிரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு குரு தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

தங்களது கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்