திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு நடந்து வருகிறது. இப்பொதுக்குழுவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டுமென திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னையில் நடந்து வரும் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள்:
* மின்சார கட்டணத்தை உயர்வை கைவிட வேண்டும்.
* தேர்தலின் போது நட்ராஜ் நடுநிலையாக செயல்படவில்லை. எனவே தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்.
* கூடங்குளம் விவகாரத்தில் பிரச்னையில் விரைவில் தீர்வு காண வேண்டும்.
* பீர்மேடு, தேவிக்குளம் தாலுகாக்களை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்.
* மக்கள் நலப்பணியாளர்களுக்கு விரைவில் வேலை வழங்கிட வேண்டும்.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
என்பது உள்ளிட்ட 24 தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இப்பொதுக்குழுவில் கலந்து கொண்டு திமுக தலைவர் கருணாநிதி பேசும்போது, "சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி அடைந்ததற்கு கட்சியில் நிலவிய பூசல்களே காரணம். கட்சி மீது நம்பிக்கை வைத்து தொண்டர்கள் செயல்பட வேண்டும்.
தற்போது எதிர்க்கட்சியாக செயல்படுவதன்மூலம் திமுக-வின் வலிமை அதிகரிக்கும். கட்சிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. ஆகவே, தொண்டர்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்" என்று பேசினார்.
தற்போது எதிர்க்கட்சியாக செயல்படுவதன்மூலம் திமுக-வின் வலிமை அதிகரிக்கும். கட்சிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. ஆகவே, தொண்டர்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்" என்று பேசினார்.

0 comments:
Post a Comment
தங்களது கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்